58. இனியபாத கைமலர்கள் | FLOWERS
Update: 2020-08-16
Description
சேவல்கள் கூவிட துயிலுணர்ந்தெழுந்து
செம்பனித் துளிகள் சிதறும்
புலர்காலை வேளை! நுண்மையான
புத்தம் புதுவாழ்வுக் காலையில்
தொழுவதற்குரிய புனிதக்கமலப்
பாதங்கள் இவை! - எனின்
தேவை இவைகளின் சேவை!
இவ்வெவனம் கையேந்தா திருக்க
எளியோர்தம் இதயம்தனில் வடியும்
குருதி யோட்டத்தை சீராக்க,
உள்ளங் கலங்கும் கண்களின்
நீரைத்துடைத்து மக்களை உவகையூட்ட,
கோடானுகோடி மக்களின் கண்களிட்ட
கோலநீரை வாரிவெளியேற்ற வந்த-இந்த
மென்மையான மலர்க் கரங்கள்
முனைந்து வந்து அணைக்கும்
அன்புக் கரங்கள்! வந்துநிற்கும்
இவர்தம் பாதங்கள்கூட பூஜைக்குரிய
இனிய பாதக் கைமலர்கள்!
Comments
In Channel























